காக்கி சட்டை கழற்றிய பாம்பு
காவி சாட்டை ஆட்டும் குரங்கு

எம் சமூகநீதி தலைவர்கள் நாமம்
நீ உச்சரித்தால் நாக்கில் சிரங்கு

பகலவனுக்கு பல் இளித்தாய்
இருளுக்குத்தான் பூஜை செய்தாய்
விண்மீன்களைப் பூசிக்கொண்டே
நிலவுக்குத்தான் வலை விரித்தாய்

வியர்வை மழையில் விளைந்த உலகை
அதளபாதாளத்தில் உருட்டிவிட்டாய்

இமாலய உயரத்தில் பொருளாதாரமென
மெழுகு வெளிச்சத்தில்
நிழல் ஆட்டுகிறாய்

ஆயிரம் மாளிகை ஏழைகளுக்கு
ஒதுக்கீடு வர்ணம் தீட்டுகிறாய்

கஞ்சிக்கு இல்லா பணக்காரர் வயிற்றில் ஆனந்த தாண்டவம் ஆடுகின்றாய்

எம் தலை கொய்தவரின் மகுடியே
எம்மை அகிலம் உயர்த்தவா பிதற்றுகிறாய்!

ஒன்றிய நரியை சீராட்டும்
இலாப வெறி பேய்க்கே
கையும் காலும் தூக்கத் தூக்கும்
கண்ணாடி பிம்பம் நீயே

  • புதியவன்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here