நூல் அறிமுகம்: HINDUTVA – NOTHING BUT BRAHMANIC SANATAN DHARMA

0

* இந்த வெளியீடு,1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த AILRC மாநாட்டில் மக்கள் கலை இலக்கிய கழகத்தால் முன்வைக்கப்பட்ட கட்டுரையின் புத்தக வடிவம் ஆகும்.
* ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் இந்துத்துவா என்பது பார்ப்பன சனாதன தர்மத்தை வலியுறுத்துவதே ஆகும் என்பதை இந்தியாவில் முதன்முதலாக எமது அமைப்பு முன்வைத்தது!
* நாடு மறுகாலனியாவதை முறியடிப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசத்தை முறியடிப்போம்! என்று நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கை அவதானித்த கோட்பாட்டு வெளிச்சத்தில் கருவறை நுழைவுப் போராட்டம், திருவையாறில் ஆண்டுதோறும் நடைபெறும் பார்ப்பனக் கும்பலின் கர்நாடக இசைக் கச்சேரிக்கு எதிராக தஞ்சையில் தமிழ் மக்கள் இசை விழா நடத்தப்பட்டது.
* தில்லையில் தீட்சிதர்களின் கொட்டத்தை அடக்கி சிற்றம்பல மேடையில் தமிழில் ஒலிக்கச் செய்த போராட்டங்கள் முதல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக வேண்டும் என்ற போராட்டம் வரை நடத்தப்பட்டது.
* 2014 மோடி ஆர்எஸ்எஸ் கும்பல் இந்தியாவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியபோது பார்ப்பன பாசிசமும், கார்ப்பரேட் பாசிசமும் இணைந்து ஹைபிரிட் பாசிசமாக உருவெடுத்துள்ளது என்பதை அவதானித்து கார்ப்பரேட்- காவி பாசிசத்தை எதிர்த்து போராடி வருகிறோம்!
* கார்ப்பரேட் காவி பாசிசத்தின் அபாயத்தை எதிர்த்து போராட அறைகூவல் விடுத்து திருச்சியில் கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் என்ற முழக்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடத்தினோம்! கார்ப்பரேட் காவி பாசிசம் அஞ்சாதே போராடு! என்ற முழக்கத்தின் கீழ் 2020ஆம் ஆண்டு மீண்டும் திருச்சியில் மாநாடு நடத்தினோம்!
* இந்தியாவில் ஆர்எஸ்எஸ் முன் வைக்கும் இந்திய பாசிசத்தின் உள்ளடக்கம் பார்ப்பன பாசிசமாக வெளிப்படும் பார்ப்பன சனாதன தர்மம் ஆகும்.
* கார்ப்பரேட் – காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் சூழலில் இந்த வெளியீட்டை ஆங்கிலத்தில் மறுபதிப்பு செய்து வெளியிடுகிறோம்.

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்
16, அருமலை சாவடி,
கன்டோன்மென்ட்,
சென்னை.
தொலைபேசி – 8925648977

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here