வருக புத்தாண்டே.!
வருக..!
நான் அழைக்காவிட்டாலும்
நீ வருவாய்..!
சரி,பரவாயில்லை வா….!!
நீ வந்தால் எமக்கு என்ன தருவாய்!
நான் கேட்பதையாவது கொடுப்பாயா…?
பலகால கேள்வியது நீ பயப்படாதே..!
பத்திரமாக பதிலளி
நீ பதற்றப்படாதே..!!
கொஞ்சம் உன் காதை கொடு…!
சாதி, மத, இன ஆணவக் கொலைகள் இல்லாத ஆண்டினை கொடுப்பாயா..!
பாலியல் வக்கிர கொடூரங்கள் இல்லாத நாளை கொடுப்பாயா..!
காடு, மலை, ஆறுகளை அழித்து கான்கிரீடாக மாற்றாத காலந்தனை கொடுப்பாயா…!
நாட்டை நாசமாக்கும்
நாசகர சட்ட, திட்டங்கள் இல்லாத நாட்களை கொடுப்பாயா!!
தாய் வழிக்கல்வியை தவிட்டுக்கு விற்காத வாரங்களை கொடுப்பாயா..!!
வேலைத்தேடும் VIP களை உருவாக்காத வினாடிகளை கொடுப்பாயா…!!
விவசாய தற்கொலைகள் இல்லாத திங்களை கொடுப்பாயா..!!
தொங்கவிடப்பட்ட தற்சார்பு தொழில்கள் இல்லாத நாளை கொடுப்பாயா..!!
புதைக்குழிக்குள் தள்ளப்பட்ட பொருளாதாரம் இல்லாத புதன்களை கொடுப்பாயா…!!
கார்ப்பரேட் நோய்க்கும்,
மருந்துக்கும், நம்மை பலி கொடுக்காத ஞாயிறுகளை கொடுப்பாயா….!!
அனைத்து துறைகளையும் அடகு வைக்காத அடுத்த நாளை கொடுப்பாயா…!!
அறிவியல் என்று ஆராதனை செய்யும் மூட நம்பிக்கை இல்லாத முழுமையான நாட்களை கொடுப்பாயா…!!
வருக
புத்தாண்டே…
வருக..
அடுத்த வருடமும்
சே.பெரியசாமி