ஜெ.மோ.போன்றவர்களுக்கு பாமரனின் கேள்வி!
இந்திய தத்துவ மரபைப் போற்றும் உங்களைப் போன்றவர்கள் 4 வேதங்களின் புருஷசூக்தம் பற்றியும் பிரம்மசூத்திரம் பற்றியும் ஏன் வாய் திறப்பதில்லை?!
இவை மட்டுமல்ல, உபநிடதம், இதிகாசம் முதல்,ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கான வைதீக நூல்களில் கூறப்படும் சமத்துவமின்மையை ஏன் எதிர்ப்பதில்லை?!
இந்திய வேதாந்த தத்துவமே பிரிவினையை ஆதாரமாகக் கொண்டுள்ளதே அதைப் பற்றி ஏன் எழுதுவதில்லை.
படிக்க:
இது ஜெ.மோ போன்றவர்கள் மீது வைக்கும் நேரடியான குற்றச்சாட்டு.
இந்திய தத்துவம்,இந்திய ஆன்மீகம் எனும் பெயரில் தங்களது வாசகர்களை ஏமாற்றும் இவர்களது தந்திரங்களையும் சூழ்ச்சியையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சனாதனத்திலிருந்து மக்கள் விடுதலை பெறாது இந்த மண்ணில் அமைதி நிலவப் போவதில்லை!
தினகரன் செல்லையா.