கொண்டாட ஏதுமில்லை!            இது போராட்ட தருணம்!

சாதிக்குள் திருமணம் முடிக்கும் ஆணாதிக்க வக்கிரங்களுக்கு எதிராக சமர்ப்புரி!

உழைக்கும் வர்க்கத்தில் பிறப்பினும் சுரண்டும் வர்க்கத்தில் இணையைத் தேடி வர்க்க வாழ்க்கையை இழக்க நினைக்காதே!

வீட்டுக்குள் பெண்ணை பூட்டி  விடுதலை பரணி பாடும் போலிகளின் முகத்திரையை கிழித்தெறி!

சமையல், அடுப்படி என்று உன் உழைப்பை சுரண்டிய நாக்குகள் இல்லத்தரசி என்று புகழ்வதை வெறுக்க கற்றுக் கொள்!

மத மூடநம்பிக்கைகள் உருவாக்கும் மவுடீக பழக்கங்களுக்கு எதிராக பகுத்தறிவை அனுதினமும் தேடு!

அக்கிரகாரத்து கழுதைகள் உருவாக்க துடிக்கும் பிற்போக்கு சமூகத்தை தகர்த்தெறிந்து பெண்ணுரிமையை நிலை நாட்டு!

அறிவியல் கல்வி முதல் அரசியல் கல்வி வரை அனைத்தையும் பயின்று சமூகத்தில் நிமிர்ந்து நில்!

சுயசார்பு பொருளாதாரம் இன்றி  உன் சுயமரியாதைக்கு வாய்ப்பே இல்லை! ஒரு போதும் சுயமரியாதையை இழக்காதே!

அடுத்தவரை ஏய்க்கும் அரசியலை புறக்கணித்து விடுதலைக்கு குரல் கொடுக்கும் பொதுவுடமை அரசியலைத் தேர்ந்தெடு!

வீட்டுக்கும், நாட்டுக்கும் உன் தலைமை புதிய விடியலை தரட்டும்!

  • திலகவதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here