மோடியின் அரபிக் குத்து!

குவைத் கத்தார் சவூதி அரேபியா மால்களில் ரிலையன்ஸ் டிரண்ட்ஸ் கதவை இழுத்து மூடுகிறார்கள்

0

அரபிக் குத்து!


பாஜக ..
ராமனை மதிக்கிறதோ
என்னவோ
ஃபோர்டை மதிக்கிறது
துர்காவை மதிக்கிறதோ
என்னவோ
டயோட்டாவை மதிக்கிறது
அனுமனை மதிக்கிறதோ
என்னவோ
ஹூண்டாயை மதிக்கிறது

லார்ட் சிவா முக்கியமா?
ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் முக்கியமா? என்றால், அதற்கு
ரிலையன்ஸே முக்கியம்!

எஸ்ஸாரா?
விநாயகரா?
என்றால்
முன்னுரிமை எஸ்ஸாருக்குதான்!

மோடிஜிக்கு தெரியும்
தன்னோட
ரேஞ்ச் ரோவர் வோக்கும்
டொயோட்டா லாண்ட் குரூசரும்
கங்கா ஜலத்தில் ஓடாதென்று!

அயோத்தி
காசி
ஹரித்துவார்
ராமேஸ்வர
சாமிகளிடம்
துளசி தீர்த்தம் கிடைக்கும்
கச்சா எண்ணெய்
இவர்கள் கமண்டலத்தில் பெருகுமோ?

நாமக்கட்டி அரசியல்
தேர்தலுக்கு தேவைப்படலாம்
தேசத்துக்கு?
கல்ஃப் நாடுகளின்
150 பில்லியன் டாலர் வணிகம் தேவை

விவசாயம் இல்லை
வேலை இல்லை
வியாபாரம் இல்லை
குந்த குடிசை இல்லை
குடிக்க கூழ் இல்லை

இந்தியராக இருக்கும்போது
இல்லாத வசதிகள்
அரபுநாடுகளின்
என்ஆர்ஐ ஆனதில் கிடைத்தது

பாப்ரி மசூதியை இடித்தோம்
வேடிக்கை பார்த்தவர்கள்தானே?
நபிகள் பெருமானின்
அடிமடியில் கைவைத்தார்கள்
நூபுர் ஷர்மாவும்
நவீன் குமார் ஜின்டாலும்

ராமர் கோவில்
உங்க ஊர் விசயம்
அமைதியாக இருந்தோம்
நபிகள் பெருமானோ
எங்கள் உயிரினும் மேலானவர்

ஈரான் மிரட்டுகிறது
ஈராக் பயமுறுத்துகிறது

குவைத்
கத்தார்
சவூதி
அரேபியா மால்களில்
ரிலையன்ஸ் டிரண்ட்ஸ்
கதவை இழுத்து மூடுகிறார்கள்

ஓமன்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஈரான்
‘பெட்ரோல் குழாயை மூடவா?’
கேட்டு
ஆர்.கே சிங்கின்
பிபியை எகிறச் செய்கின்றன

ஜோர்டான்
ஆப்கானிஸ்தான்
பஹ்ரைன்
மாலத்தீவு
லிபியா
இந்தோனேஷியாவின்
இந்தியத் தூதர்களுக்கு
குளிர் காய்ச்சல்

இது காவி அரசு மட்டுமில்லை
கார்ப்ரேட் அரசும்கூட!

நூபுர் ஷர்மாவையும்
நவீன் குமார் ஜின்டாலையும்
அன்ஃப்ரெண்ட் செய்கிறது
பிஜேபி

‘அலமத்தி ஹபி போ
அலமத்தி ஹபி போ
அலமத்தி ஹபி வந்தாளே’

GCCயின்
அரபிக்குத்துக்கு
டிக் டாக் ஆடுகிறார்கள்
மோடியும் அமித்ஷாவும்!

GCC – Gulf Cooperation Council

  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here