நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் தெரு ஓவியர் கெவின் லீ ( 2008 ) வரைந்து அளித்த சிறந்த யதார்த்த ஓவியம்.
ஓவியத்தில் ஏழைச்சிறுவன் படிகளில் உட்கார்ந்திருக்கிறான்; அவன் மீதே பலர் வேகமாக நடக்கிறார்கள் ; கடந்து போகிறார்கள்.
நம்மைச் சுற்றி நம் மத்தியிலேயே வறிய ஏழைகள் வாழ்கிறார்கள். எப்படி அவர்களைக் கண்டும் காணாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம், அல்லது மரத்துப் போய்விட்டோம்? வறுமைக் குழந்தைகளை நம் நெஞ்சில் தைப்பதுபோல ஓவியர் கவனப்படுத்தியுள்ளார். எதார்த்தத்தின்மீது தன்சிந்தனையை அளவாய்க்கலந்து ” வெளிப்பாட்டுப்
பாணி “யில் கொடுத்துள்ளார்.
“உண்மையான சாரம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை ” என்று ஓர் எழுத்தாளர் எழுதினார். கண்ணுக்குப் புலப்படாததையும் கலைமூலம் தருவித்துப் புலப்படுத்தமுடியும் என்கிறார் ஓவியர் கெவின் லீ.
தகவல் : வீரமணி வீராசாமி.
அறிமுகம் : பீட்டர்
ஓவியம்: ஓவியர் கெவின் லீ