மாபெரும் தெலுங்கானா போராட்டம்


நூல் அறிமுகம்

வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம்  (1946-1951)  இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஒரு மகத்தான மக்கள் போராட்டமாகும்.

நிஜாம் மாநிலத்தின் நிலப்பிரபுத்துவ அதிகாரத்திற்கு எதிரானதும், அதிகாரவர்க்க நிலப்பிரபுத்துவ மிராசுதாரர்களின் கொடுமையான சுரண்டலுக்கு எதிரானதும் மற்றும் நிஜாம் மாநிலத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பாதுகாக்க நுழைந்த நேரு அரசின் ராணுவத்துக்கு எதிரான ஆயுதம் தாங்கிய விவசாயிகளின் ஒரு மாபெரும் விவசாய புரட்சியாகும்.

நிலத்திற்காகவும், உணவுக்காகவும், தங்களின் விடுதலைக்காகவும் தெலுங்கானா மக்களால் நடத்தப்பட்ட ஆயுதம் தாங்கிய ஒரு மகத்தான விவசாய புரட்சியாக அது விளங்குகிறது.

தெலுங்கானா விவசாயிகளின் எழுச்சியில் கற்றுக்கொண்ட பாடத்தை நக்சல்பாரி அமுல்படுத்தியது.

வசந்தத்தின் இடிமுழக்கமாக எதிரொலித்த நக்சல்பாரி உழவர் பேரெழுச்சி வர்க்க உணர்வுள்ள தெலுங்கானா மக்களுக்கு மீண்டும் ஒரு உந்துதலை கொடுத்தது.

விவசாயிகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்டியாக விளங்கிய நக்சல்பாரி புரட்சிப் பாதையில் நிலத்திற்கும் அரசியல் அதிகாரத்துக்குமான பேரெழுச்சியாக மீண்டும் தெலுங்கானா பகுதிகளில் இயக்கம் பரவியது.

90-களில் ஆளும் வர்க்கங்களினால் திணிக்கப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டுவதற்கு எத்தனிக்கிறது.

விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத காரணத்தினால் விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை.

விவசாய உள்ளீடு பொருட்கள் அனைத்தும் கார்ப்பரேட் வேளாண் வர்த்தக கழகங்களின் பிடிக்குள் சென்றுவிட்டதால் பல மடங்கு விலை ஏறிவிட்டது. அதனால் விவசாயத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதால் விவசாயக் கூலிகளுக்கு கட்டுப்படியான கூலியை தர விவசாயிகளால் இயலவில்லை.

ஆளும் வர்க்கங்களின் திட்டமிட்ட தாக்குதலில் விவசாயத்திலிருந்து அகில இந்திய அளவில் 48% பேர் வெளியேறிவிட்டனர்.

தமிழகத்திலோ 28 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தை நம்பி வாழ்வதாக தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

நாட்டின் முதுகெலும்பான விவசாயம் அழிந்து போவதையும், அதன் காரணமாக உணவு தேவைக்கு கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தி நிற்பதையும் நாம் அனுமதிக்க முடியாது.

“நிலம், அதிகாரம், விடுதலை” என்ற முழக்கத்துடன் விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நாட்டை புதிய பாதையில் பயணிக்க போராடுவதற்கு இந்த வெளியீடு உதவும் என்ற நம்பிக்கையுடன் அறிமுகம் செய்கிறோம்.

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் (G PAY)  – 8925648977

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here