விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு!

நூல் அறிமுகம்.

விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு!

செப்டம்பர் -27
முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வோம்!

டெல்லியில் நடைபெற்று வரும் வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம் கடந்த  10 மாதங்களாக தொடர்கிறது. இந்தியாவின் விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கி விட்டு விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டி அடிக்கும் கார்ப்பரேட் விவசாய கொள்கையே மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையாக உள்ளது. இதனை முன்னறிந்து விவசாயியை வாழவிடு! என்ற அரசியல் முழக்கத்தின் கீழ் தஞ்சையில் மக்கள் அதிகாரம் சார்பில் மாநாடு ஒன்றை நடத்தினோம். அந்த மாநாட்டை ஒட்டி சிறப்பு வெளியீடாக, ஆகஸ்டு-2017 ல் இந்த வெளியீட்டை கொண்டு வந்தோம். இந்தியாவின் விவசாயம் எவ்வாறு மெல்ல மெல்ல ஏகாதிபத்திய முதலாளித்துவ, கார்ப்பரேட் நிறுவனங் களின் கைப்பிடிக்குள் சென்று விட்டது என்பதை விளக்குகின்ற சிறு வெளியீடாக இந்த நூல் உள்ளது..

எதிர்வரும் செப்டம்பர் 27 – 2021, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ள நாடு தழுவிய முழு அடைப்பில் மக்கள் அதிகாரம் முழுமையாக தன்னை இணைத்துக் கொள்கிறது. டெல்லியில் நடக்கும் போராட்டம் மூன்று மாநிலங்களில் உள்ள விவசாயிகளால் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.  இந்த மாநிலங்களில் மட்டும் தான் வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள், பிற மாநிலங்கள் இதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்ற பாசிச மோடி அரசின் அரசியல் பித்தலாட்டங்களை முறியடிக்கின்ற வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை போராட்ட களமாக்குவோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்படுகின்ற 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை ஒன்றிணைத்தும், மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் தனித்தனியாக செயல்படுகின்ற சிறு விவசாய சங்கங்களை ஒன்றிணைத்தும், ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து நாடு தழுவிய முழு அடைப்பை  முழு வெற்றி பெறச் செய்ய போராடுவோம்.

நகர்ப்புறங்களில் கான்கிரீட் கூடுகளில் அடைந்து கிடக்கின்ற தொழிலாளர்கள் மத்தியில், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்ட உணர்வை தூண்டுவதற்கும், பிற வர்க்கங்களான சிறுதொழில் முனைவோர், வர்த்தகர்கள், மாணவர்கள் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அறிவுத் துறையினரையும் ஒன்றிணைத்து போராட்டக் களத்திற்கு கொண்டு வரவும் இந்த சிறு வெளியீடு ஒரு பேராயுதமாக பயன்படும் என்று நம்புகிறோம்.

நூல் கிடைக்குமிடம்,

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் – 8925648977

மற்றும்

மக்கள் அதிகாரம் அமைப்பு முகவரிகளில் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here