இந்தியாவில் முதுகெலும்பான விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக்கொண்டு, விவசாயத்தை விட்டு விவசாயிகளை விரட்டி அடிக்கின்ற சதித் திட்டத்தை அம்பலப்படுத்துகின்ற வகையில் விவசாயிகள் விடுதலை முன்னணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது புதிய வெளியீட்டை வெளியிட்டுள்ளது.
“உழுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம்” என்ற மூல முழக்கத்துடன் செயல்படுகின்ற விவசாயிகள் விடுதலை முன்னணி நிலம், அதிகாரம், விடுதலை என்ற மந்திர ஆயுதங்களின் மூலம் விவசாயிகளை ஒன்று திரட்டவும், நாட்டை அடுத்தகட்ட உற்பத்தி வளர்ச்சிக்கு கொண்டு செல்லவும் லட்சியத்தை ஏந்தி செயல்படுகிறது என்பதை அறிவீர்கள்.
2021 டிசம்பர் 25 முதல் பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்துள்ள விவசாயிகள் விடுதலை முன்னணியின் வெளியீடுகளை வாங்கிப் படியுங்கள்! பரப்புங்கள்!
பிரதிகள் கிடைக்குமிடம்
கீழைக்காற்று வெளியீட்டகம்
மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் உள்ளூர் கிளைகள்.

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் (G PAY) +91 8925648977