நூல் அறிமுகம்:

 

சீனாவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி நடப்பதாக தொடர்ந்து முதலாளித்துவ ஊடகங்களால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. 1976- ல் தோழர். மாசேதுங் மறைவுக்குப் பிறகு சீனா புதிய ஜனநாயகத்தில் இருந்து சோசலிச சமூக அமைப்பை நோக்கி முன்னேறுகின்ற கொள்கைகளை கைவிட்டு படிப்படியாக முதலாளித்துவ சமூக அமைப்பை நோக்கி வீழ்ச்சியுற துவங்கியது. தோழர்.
மாசேதுங் காலத்திற்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றிய டெங் கும்பல் சீனாவை முதலாளித்துவ பாதைக்கு கொண்டு சென்றது.

“பூனை கருப்பாக இருந்தால் என்ன வெள்ளையாக இருந்தால் என்ன எலியைப் பிடித்தால் சரிதான்” என்ற பிரபலமான முழக்கத்தை முன்வைத்து தனது கேடுகெட்ட முதலாளித்துவ கொள்கைக்கு நியாயத்தை கற்பித்தது.
அதன்பிறகு சார்க் உள்ளிட்ட ஆசிய பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் சந்தையைக் கைப்பற்ற துவங்கியது.

சீனா டெங் கும்பலின் ஆட்சியில் கடைபிடித்த ‘சந்தை சோசலிசம்’ என்ற முதலாளித்துவ வடிவத்திற்கு மாறியதன் மூலம் சீனா தற்போது பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது சீனாவின் போலி கம்யூனிச, ஒரு கட்சி பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் அங்குள்ள தொழிலாளர்கள் இம்மியளவு கூட உரிமை என்று கசக்கி பிழிய படுகின்றனர்.

கிராமப்புறத்தில் விவசாயத்தில் இருந்து விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டு நிலங்களை கைப்பற்றி அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்வது, பன்னாட்டு கம்பெனிகளின் லாப வேட்டைக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பது போன்ற முதலாளித்துவ அளவுகோலின்படி தான் சீனா ஒரு பொருளாதார வல்லரசாக வளர்ந்திருக்கிறது.

தோழர். மாசேதுங் காலத்தில் உருவாக்கப்பட்ட சோசலிச கட்டுமானத்தை பயன்படுத்திக்கொண்டு பொருள் உற்பத்தியில் குறைந்த கூலிக்கு, அதிக பொருட்களை உற்பத்தி செய்யும் ‘முதலாளித்துவ நிர்வாக திறனை’ கடைபிடிப்பதன் காரணமாக இன்று அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா வளர்ந்து நிற்கிறது.
சிறிது சிறிதாக வளர்ந்து உற்பத்தியில் ஏகபோகத்தை கையில் வைத்துக்கொண்டு புதிய செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவது என்ற ஏகாதிபத்திய தன்மையை சீன முதலாளித்துவம் தற்போது அடைந்திருக்கிறது.

சோசலிச சீனா எவ்வாறு முதலாளித்துவ சீனாவாக மாறியது என்பதை பற்றி ஆய்வு செய்து டாங்பிங் ஹான் முன் வைத்துள்ள இந்த ஆய்வுக் கட்டுரையை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 2015 ஆம் ஆண்டு வெளியிட்டது.
இன்று அமெரிக்காவுடன் போட்டி போடும் சீனாவின் முதலாளித்துவ பாதை பற்றி புரிந்து கொள்வதற்கு இந்த நூல் நமக்கு உதவும்.

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் (G PAY)  – 8925648977

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here