ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் ஆன்மாவையே பலி வாங்க நினைக்கிறது.

ஜெர்மனியின் ஒப்யூரர் கோட்பாட்டின் படி பாசிச முறையில் செயல்படும் ஏகத்தலைவருக்கு அடிபணிந்து நடக்கும் ஒரு ராணுவத்தை வைத்திருக்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்தான் இன்று இந்தியாவின் மிக வலிமையான அமைப்பு.

அதன் இரண்டு பிரச்சாரகர்கள் இந்தியாவின் பிரதமர்களாகியிருக்கிறார்கள். 1951-இல் அதன் அரசியல் கட்சியான பாரதிய ஜன சங்கம் 1977 இல் உருவான ஜனதா கட்சியில் ஐக்கியமானது.

ஜனதாவிற்குள் இருந்து செயல்பட்ட அதன் உறுப்பினர்கள் அவர்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா அல்லது புதிய கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா என்கிற பிரச்சனை எழுந்த போது ஜனதாவிலிருந்து வெளியேறியது. ஒரு சில மாதங்களில் மீண்டும் ஒரு அரசியல் கட்சியாக எழுந்தது. இந்த முறை ஒரு மரியாதை மிக்க பாரம்பரியத்திலிருந்து வருவது போன்ற ஒரு பொய் பிம்பத்தை உருவாக்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக் கொண்டது.

ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் வரலாற்றுடன் ஒரு போரில் ஈடுபட்டிருக்கிறது. இந்தப் போரில் அசோகர் என்கிற பவுத்தர், அக்பர் என்கிற முஸ்லீம், நேரு என்கிற பண்பட்ட இந்து அறிவாளி – ஆகிய இந்தியாவின் மகத்தான் சிற்பிகள் மூவரை சிறுமைப்படுத்துகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் சாதனைகளைத் துடைத்தெறிந்து விட்டு தன்னுடைய குறுகலான பிளவுவாதக் கொள்கையை முன்னெடுக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்ட 1925-லிருந்து இன்று வரையிலான வரலாற்றின் ஆணித்தரமான ஆய்வுதான் ஏ.ஜி. நூரானியின் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல். என்கிற நூல்.

ஆர்.எஸ்.எஸ் என்பது மத சார்பின்மையையும், மதச்சார்பற்ற, ஜனநாயக் குடியரசான இந்தியாவையும் அதன் பன்முகக் கலாச்சாரத்தையும் அழிக்க முற்பட்டுள்ளது. இந்த ஆபத்தான சூழலில் இந்தியா என்கிற உன்னதக் கருத்தாக்கத்தைக் காக்க விரும்பும் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்சின் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம். அந்த வரலாற்றை நம் கண் முன்னே நிறுத்தும் படைப்பு தான் ஏ.ஜி.நூரானியின் THE RSS A MENACE TO INDIA என்கிற ஆங்கிலப் புத்தகம்.

ஆர்.எஸ்.எஸ் ஜனநாயக ஆட்சி முறைக்கும், இந்தியா முழுமைக்குமான அச்சுறுத்தல் என்பதை நூரானி நுணுக்கம் நிறைந்த ஏராளமான தரவுகளுடன் இந்த நூலில் நிறுவுகிறார்.

ஆயினும், ஆர்.எஸ்.எஸ் வெகுவாக விரிவடைந்து மலைக்க வைக்கும் அரசியல் செல்வாக்கு பெற்றிருப்பதாகத் தோன்றினாலும் அதனைத் தோற்கடிக்க முடியும் என்றும் இந்த நூலில் அவர் காட்டுகிறார்.

இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் செய்தி. இந்த மகத்தான நூலினை ஃபிரண்ட் லைன் ஆசிரியர் தோழர்.ஆர்.விஜயசங்கர் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அளித்துள்ளார்.

இந்தியா தன் ஆன்மாவைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறது… இப்போராட்டத்தில் நாமும் நம்மை இணைத்துக் கொள்வோம்…*

வெளியீடு:
பாரதி புத்தகாலயம்.
நூலின் விலை ரூ.895.00
பேச: 044 – 24332424.
G-Pay, Phone Pay, Paytm, Whastapp மூலம் பணம் செலுத்த : 94449 60935

நன்றி: jamalan.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here