25 ஆண்டுகால பயணத்தில் கீழைக்காற்று தங்களின் பேராதரவுடன்
கீழைக்காற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முற்போக்கு நூல்கள் முகவரியாக திகழ்கிறது. எமது கால் நூற்றாண்டு பயணத்தில், எம்முடன் தமக்கு முன்னால் போட்டுக்கொள்வதற்கு எழுத்துகளும், பின்னால் போட்டுக் கொள்வதற்கு பட்டங்களும் கொண்ட பிரபல எழுத்தாளர்களோ, எழுத்துப் பிரபலங்களோ இல்லை. சமூக மாற்றத்திற்கான படைப்புகளை முன்வைக்கின்ற பதிப்பகமாக தனித்த அடையாளத்துடன் தெரிகிறது கீழைக்காற்று.
இந்த இனிய பழமரத்தின் கனிகளை சுவைத்து தன்னை சமூக பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பலர். ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மறுகாலனியாதிக்க சுரண்டல் காலனி, அரைக்காலனி, நவீன காலனி நாடுகளை கழுத்தை நெரிக்கும் புயல் காற்றாக சீறிவீசும்போது அதனை எதிர்த்து பாட்டாளி வர்க்கத்தின் கீழைக்காற்றாக கிளர்ந்து எழுந்தது எமது பதிப்பகம்.
மார்க்சிய – லெனினிய நூல்கள் மட்டுமன்றி, இந்தியாவின் இணையற்ற சீர்திருத்தவாதிகளானா தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ஜோதிபாய் பூலே போன்ற பார்ப்பன எதிர்ப்பு மரபில் முன்னோடியாகத் திகழ்கின்றவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழகத்தில் உள்ள இளம் வாசகர்களுக்கு அறிவு சாளரத்தை திறந்து விட்டிருக்கிறது கீழைக்காற்று.
அந்த வரிசையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நாற்பத்தி ஐந்தாவது புத்தகக் கண்காட்சியில்: 1.தோழர் மாசேதுங் முன்வைத்த கூட்டு அரசாங்கம் என்ற கட்டுரையை புதிய பொலிவுடன் மீள் பதிவு செய்கிறது. 2.தோழர் மார்க்ஸ் முன்வைத்த ஆசிய உற்பத்தி முறை குறித்த ஆய்வுகளை தற்போது கிடைத்திருக்கும் புதிய தரவுகளுடன் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக வெளியிட்டுள்ளது 3. டெல்லியில் ஓராண்டிற்கு மேல் நடந்த 3 வேளாண் சட்டத்திருத்தங்கள் என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது அவை 25 ஆண்டுகளுக்கு முன்னரே எவ்வாறு வாஷிங்டன் டிசியால் தீர்மானிக்கப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் விளக்குகின்ற வெளியீட்டையும் கொண்டு வந்துள்ளது 5.கார்ப்பரேட் காவி பாசிசத்தை பாதுகாத்து சட்டபூர்வமாகவே பாசிசத்தை கொண்டுவருவதற்கு துணை புரிகின்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தன்மையை விளக்குகின்ற வகையில் புதிய வெளியீட்டையும் கொண்டுவந்துள்ளது.
இவற்றுடன் கூடுதலாக கீழ்க்கண்ட நூல்களை கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிராக களத்தில் ஏந்தி போராடுவதற்கு பொருத்தமாக 25 சதவீத கழிவுடன் ரூபாய் 300 க்கு வாசகர்களுக்கு அளிக்கிறது. மார்ச் 6ஆம் தேதி வரை உள்ள இந்த புத்தககாட்சியில் அறிவை விரிவு செய்வதற்குப் பொருத்தமான நூல்களை தேடிச்சென்று பெற்றுக் கொள்ளவும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரியும் சகதொழிலாளர்களின் இல்லற நிகழ்வுகள், திருமணங்களுக்கு புத்தக அன்பளிப்பை தருவதற்கு பழக்குங்கள்! சமூக மாற்றத்திற்கான ஆழமான சிந்தனையை விதைத்திடுவோம்!