நூல் அறிமுகம்!

தமிழர் வரலாற்றை அழிக்கும் பாஜக.வின் கல்வித்திட்டம்

மிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசானது, பாசிச மோடி கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020 ஐ நிராகரிப்பதாகவும், மாநிலத்திற்கு என்று தனியாக கல்விக் கொள்கையை வரையறை செய்து முன்வைக்கப் போவதாகவும் அறிவித்தது.

ஆனால் இன்னமும் அப்படிப்பட்ட ஒரு முன்மொழிதல் வந்தபாடில்லை.
அதேசமயம் இந்திய ஒன்றிய அரசு மற்றும் பாசிச மோடி இருவரும் புதிய கல்விக் கொள்கை அமுல்படுத்த துவங்கி விட்டதாக பொதுவெளியில் அறிவிக்கின்றனர்.
இந்திய ஒன்றியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் மாநிலக் கல்வி கொள்கை வகுப்பது கல்வியில் மாநிலங்களின் உரிமையுடன் தொடர்புடைய ஒன்றாகும்.

அதற்கும் ஒரு முடிவு கட்ட வேண்டியுள்ளது. காவி கல்விக் கொள்கைக்கு எதிராக பகுத்தறிவு, சுயமரியாதை, அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையில் கல்விக் கொள்கையை வகுக்கவும் வேண்டியுள்ளது.

இவை உருவாகின்ற வரையில் பாரதிய ஜனதா கட்சி காத்திருக்கப் போவதில்லை.
தனக்கென்று ஒரு பித்தலாட்டமான வரலாற்றை முடிவு செய்து புதிய தலைமுறை மீது திணித்து வருகிறது.

2020 தேசிய கல்வி கொள்கை பல தேசிய இனங்களைக் கொண்ட இந்திய சமூகத்தை ஒற்றை அமைப்பாக மாற்றுவதற்கு முடிவெடுத்து அதை அமல்படுத்தி வருகிறது. 3000 ஆண்டுகளாக பிறப்பின் அடிப்படையில் கல்வி உரிமையை மறுத்த பார்ப்பன ஆதிக்க கும்பல், போராடிப் பெற்ற கல்வி உரிமை ஓன்றிரண்டு தலைமுறை மக்களை சென்றடைவதற்குள் தடுக்க துவங்கிவிட்டது.

இந்த மோசடிகளையும், நாம் அமைதியாக இருப்பதன் மூலம் புதிய கல்விக் கொள்கை என்று பாசிச, வக்கிர வரலாற்றுப் புரட்டுகள் நமது தலையில் கட்டப்பட்டு விடும் என்ற அபாயத்தினை எச்சரிக்கையுடன் முன்வைக்கிறது இந்த நூல்.

பேராசிரியர் அ.கருணானந்தன் தமிழர்களுக்கு கிடைத்த அறிய பெரும் அறிஞர்.
அவரது இந்த கட்டுரையை தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியீடாக தயாரித்து சிறப்பாக வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் இளைஞர்களுக்கு தமிழர் வரலாற்றை அழிக்கும் பாஜகவின் கல்வித் திட்டம் என்ற இந்த நூல் கையேடாக பயன்படும் என்பது மட்டுமல்ல போலியான வரலாற்றை தூக்கி எறிந்து அறிவியல்பூர்வமான வரலாற்றை எழுதுவதற்கு பயன்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் (G PAY)  – 8925648977

 

1 COMMENT

  1. Book rate podunga budget குள்ள வந்தால்தான் வாங்க முடியும் pls புத்தகம் எவ்வளவுனு போடுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here