“செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை”.
: குறள் 411

{செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்}

ஒரு நூலைப் படிக்க ஒரு மணி நேரம் எடுக்கும். அதே ஒரு மணி நேரத்தில் செழுமையான கருத்துகளைச் சொல்லக்கூடிய ஒரு சான்றோரின் உரையினைக் கேட்டால், அது பல நூல்களைப் படித்ததற்குச் சமனாகும். அவர் பல பொத்தகங்களிலிருந்து கருத்துகளை உங்களுக்குப் பிழிந்து எடுத்துத் தருவார். அந்த வகையிலேயே சான்றோர்களின் கருத்தரங்கு உரைகளைக் கேட்பது பயனுள்ளதாகின்றது. பல நூல்களைக் கற்ற அச் சான்றோனுக்குக் குறித்த துறையில் பட்டறிவும் இருக்குமாகவிருந்தால், அத்தகைய உரையினைத் தவற விடலாமா?

அந்த வகையிலேயே தொல்லியலாளர் அமர்நாத் இராமகிருஸ்ணா அவர்களின் உரை அமையவுள்ளது.

கிண்டப்பட்ட கீழடிகளையே பார்த்து வியந்துள்ள நாம், அகழப்படாத அழகன்குளம் போன்ற பல இடங்களில் என்னவெல்லாம் இருக்கலாம் என அறிவோமா!
அகழப்பட்டது கை மண்ணளவு, அகழப்பட வேண்டியது உலகளவு.

விரிவாக அறிய, இணையுங்கள்

தமிழ் அருங்காட்சியகம் இலண்டன் வழங்கும்,
“கீழடி – பனிப்பாறையின் வெளித் தெரியும் முனையே”
Keeladi – only tip of the iceberg

கருத்துரை: முனைவர். அமர்நாத் இராமகிருஸ்ணா
திகதி: 12-02-2022
நேரம்: மு.ப 11.00- பி.ப 1.00 (பிரித்தானிய நேரம்)
இலங்கை/இந்திய நேரம்:
பி.ப 4.30- பி.ப 6.30

Zoom நுழைவு எண்: 4202681078
இணைவதற்குக் கடவுச்சொல் தேவையில்லை.

Zoom link👇
https://us02web.zoom.us/j/4202681078

நன்றி

  • வி.இ.குகநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here