இலங்கையில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி தோழர்கள் தொடர்ச்சியாக கடந்த ஓராண்டு காலமாக ஆளும் கட்சிக்கு எதிராக மக்களை திரட்டி போராடி வருகின்றனர்.
கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழர்-சிங்களர் இருவர் இடையே உள்ள முரண்பாட்டை ஆழப்படுத்தி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர் இனவாத பிழைப்பு வாதிகள்.
இலங்கையில் வர்க்க ஒற்றுமை சாத்தியமில்லை என்றெல்லாம் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
இலங்கை ஒரு மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் வீழ்ச்சி அடைந்த பின்னர் நாட்டின் அரசியல், பொருளாதார, கலாச்சார வாழ்க்கையில் புதிய மாற்றம் ஒன்று தேவை என்ற கண்ணோட்டத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் இலங்கையில் உள்ள மார்க்சிய லெனினிய தோழர்கள்.
பேராசிரியர் சிவசேகரம் தலைமை தாங்கும் இந்த கருத்தரங்கம் அத்தகைய நம்பிக்கையை இலங்கை மக்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவிலும் புதிய மாற்றத்தை நோக்கி போராடிக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் அளிப்பதாக உள்ளது.