மனித மலத்தை மனிதனே எடுக்கும் இழிவு. ஒரு குறிப்பிட்ட தீண்டபடாத சாதியின் தொழிலாகவே இன்றும் நீடிக்கிறது என்றால், அதுபோல் கருவறையில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நீடிக்க முடியும் என்பதும் இன்றும் மனுதர்மம் வேத ஆகமங்கள் நடைமுறையில் இருக்கிறது என்பது தானே அர்த்தம்.

மனுநீதிப்படி சூத்திரர்கள் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள். சூத்திரன் தாழ்த்தப்பட்டவன் படிக்கக்கூடாது. படித்தால் நாக்கை அறுக்க வேண்டும். படிப்பதை கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும். பிராமனர் படிக்கும் வேதத்தை சூத்திரன் படித்து தேர்சி பெற்றால் உடம்பை துண்டு துண்டாக வெட்டி சிதைக்க வேண்டும். (அத்.12 சுலோ.4)

சூத்திரன்  பிராமனர்களை திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். பிராமனன் பெயர் சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால், அவன் வாயில் 10 அங்குல நீளம் உள்ள இரும்பு கம்பியை காய்ச்சி எரிய வைக்க வேண்டும். (அத்.8 சுலோ 271)

 

பிராமனர்களைத் தவிர மற்றவர்களை பெண்கள் உட்பட கொல்வது பாவம் இல்லை. (அத்.11 சுலோ 25) 

சூத்திரனின் உயிரும் பார்ப்பானின் மயிரும் சமம். (அத் 8 சுலோ 379)

பெண் கணவனின் அடிமை (அதர்வண வேதம்)

(தொடரும்…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here