!!அபசூத்திராதிகரணம்!!

சூத்திரம் 35 ஆனது ஜானஸ்ருதி என்கிறவன் க்ஷத்ரியனே என்பதை உறுதிப் படுத்துகிறது. காரணம் ஒரு குருவினால் பிரம்மோபதேசம் அல்லது பிரம்ம வித்தையானது இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதாகும். ஜானஸ்ருதி என்பனுக்கு எவ்வாறு ரைக்வரினால் பிரம்ம வித்தை கற்றுக் கொடுக்கப்பட்டது எனும் பூர்வ பக்ஷிகளின் சந்தேகத்திற்கு பதில்தான் இந்த சூத்திரத்தின் பாஷ்யங்களிலும் சொல்லப்படுகிறது. அதாவது ஜானஸ்ருதி என்பவன் இருபிறப்பாளர்களில் ஒருவனான க்ஷத்ரியன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே ரைக்குவர் தனது சீடனாக ஏற்றுக் கொண்டார் என்பது.
இதன் மூலம் சூத்திரனுக்கு பிரம்ம வித்தையில் அதிகாரம் இல்லை என்பது நிரூபிக்கப்படுகிறது.

பகுதி 4 ல் குறிப்பிட்டிருந்த அதே நால்வர்களின் பாஷ்ய சுருக்கத்தை சூத்திரம் 35 ற்கும் தருகிறேன்.

Kshatriyatvavagateschottaratra chaitrarathena lingat 1.3.35 (98)

And because the Kshatriyahood (of Janasruti) is known from the inferential mark (supplied by his being mentioned) later on with Chaitraratha (who was a Kshatriya himself).

An argument in support of Sutra 34 is given. Janasruti is mentioned with the Kshatriya Chaitraratha Abhipratarin in connection with the same Vidya. Hence we can infer that Janasruti also was a Kshatriya because, as a rule, equals are mentioned together with equals. Hence the Sudras are not qualified for the knowledge of Brahman.
(Swami Sivananda)

க்ஷத்திரியத்வகதே: ச உத்தரத்ரசைத்ர ரதேந லிங்காத் (1.3.35)

(பதவுரை) அயம் ஜாநஸ்ருதி:இந்த ஜாஸ்ருதியானவர், :(ந ஜாதிசூத்ர:)=சூத்திரஜாதியிற் பிறந்தவனன்று. ஏனென்னில் (உத்ரத்ர)=ஸம்வர்க்க வித்யாவிதிக்கு அடுத்துள்ள அர்த்தவாதத்தில் (சைத்ரரதேந)=க்ஷத்திரியஜாதியிற் பிறந்த சைத்ராதன் சொல்லப்பட்டிருக்கும் (லிங்காத்) = அடையாளத்தைக் கொண்டு (க்ஷத் திரியத்வ கதேஸ்ச)=க்ஷத்திரியனாக விருக்கும் தன்மை அறியப்படுவதே அதன் காரணமாகும்.

பாஷ்யம்(விளக்கவுரை).- பின்வருவனவற்றாலும் ஜாநஸ்ருதி ஜாதிசூத்திரனன்று. எக் காரணம் பற்றி பிரகரண நிரூபணத்தினால் இந்த ஜாநஸ்ருதிக்கு க்ஷத்திரியத்வ மானது மேலுள்ள விடத்தில் அபிப்ரதாரியான சைத்திரரதனாகிற க்ஷத்திரியனுடன் சேர்த்துப் படிக்கப்பட்டிருக்கும் அடையாளத்தைக் கொண்டு அறியப்படுகின்றதோ அக்காரணம்பற்றியே என்க.
“அவரிடமிருந்து சைத்ராதியெனப் பெயரிய ஒரு க்ஷத்ரபதி(க்ஷத்திரியன்)பிறந்தான்” என்றதாலும் க்ஷத்திரபதித்வம் காணக்கிடப்பதினின்றும் இவருக்கு க்ஷத்திரி யத்வமானது தெளிவாகக் காணக்கிடக்கின்றது. அந்த க்ஷத்திரியனான அபிப்சதாரியுடன் கூட ஒரே வித்யையில் சொல்லியிருத்தலானது ஜாநஸ்ருதி
க்ஷத்திரியன் என்பதைக் குறிப்பிடுகிறது. ஸமானமாயுள்ளவர்களுக்கே பெரும்பாலும் ஒரே வாக்கியத்தில் சேர்ந்த பாடம் இருக்கிறது. தேர்ப்பாகனை அனுப்புதல் அன்னதானம், கொதானம் செய்தல் இவற்றின் மூலம் கிடைத்த ஐஸ்வரிய யோகமிருப்பதாக வெளியாவதைக் கொண்டும் ஜாநஸ்ருதி க்ஷத்திரியன் என்ற அறிவுண்டாகிறது.ஆனது பற்றி ஜாதி சூத்திரனுக்கு அதிகாரம் கிடையாது.(35) (ஆதி சங்கரர்)

1-3-35 உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத்

பொருள்:சைத்ரரதன் என்பவனுக்கு க்ஷத்ரியன் என்பதற்கான அடையாளங்கள் உள்ளதால், சூத்திரம் 1-3-33ல் கூறப்பட்டவனான ஜானஸ்ருதி க்ஷத்ரியனே.

விளக்கம்:இதன் மூலம் காபேயனுடன் ப்ரஹ்மவித்யை பயின்ற அபிப்ரதாரி என்பவன் சைத்ரரத வம்சத்தைச் சார்ந்த அரசன் என்றும், அவன் ஒரு கத்ரியன் என்றும் புரிகின்றது. இதேபோல், ரைக்ரவருடன் தொடர்புடைய ஜானஜ்ருதியும் க்ஷத்ரியனாகவே இருக்க வேண்டும், சூத்திரன் அல்ல. ஆக, சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை.(ஶ்ரீ ராமாநுஜர்)

பின்னர் அடுத்துச் சைத்திர ரதரோடு இலிங்க மூண்மையின் (1.3.35)

“சௌனக் காபேயரும், அபிப்பிரதாரி காக்ஷசேநியும் போசனஞ் செய்யும் போது, பிரமசாரி ஒருவன் அவர்களை யாசித்தான்” என்றற்றொடக் கத்த சுருதிகளிலே, பிராமணர் க்ஷத்திரியர்களின் தொடர்பு சம்வர்க்க வித்தையிற் காணப்படுகின்றது.
ஒத்த வம்சத்தவர்களே மற்றோர் ஒத்த வம்சத்தார்க்கு விசேடமாக யாகஞ் செய்விப்பவராகின்றனர். (ஶ்ரீ நீலகண்ட சிவாச்சாரியார்)

மற்றைய சூத்திரங்களுக்கான விளக்கத்தை அடுத்த பகுதியில் காண்போம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here