அறியப்படாத பிரம்மசூத்திரம் பகுதி 2


முதல் பகுதியில் பிரம்ம சூத்திரத்திற்கான அறிமுகத்தை வழங்கினோம். இந்தப் பகுதியில், பிரம்ம சூத்திரத்திற்கு ஆதிசங்கரர் எழுதிய சங்கர பாஷ்யம் (ப்ரம்ஹ ஸூத்ர சாங்கர பாஷ்யம்) நூலின் முகவுரையிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன்.

சங்கர பாஷ்யத்தை தமிழாக்கம் செய்தவர் மஹாமஹோபாத்தியாய
வேதாந்தகேஸரி பங்கானாடு ப்ரம்ஹஸ்ரீ, கணபதி சாஸ்திரிகள் அவர்களின் முக்கிய சிஷ்யரும்,வியாகரண வேதாந்த சாஸ்திர பாரங்கதரும், பாகவத,
பகவத்கீதோபன்யாஸகரும், சோதிட மந்திர சாஸ்திர வித்வானும், ‘ஆர்யமத ஸம்வர்த்தனீ’ பத்திராதிபருமான ப்ரம்ஹஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் ஆவார். இவர் எழுதிய முகவுரையிலுள்ள சில பகுதிகளைக் கீழே தருகிறேன்.

 

மஹாபாரத காலத்து முன்னர் தேசத்தில் த்ரைவர்ணிகர்கள் வேதவைதிக மார்க்கத்தில் எத்துணைத் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும், மஹாபாரத காலத்துக்குப் பின்னர் சங்கரர் காலமான கலிபுறந்து 2593 வருஷங்களிலேயே எத்துணை சீர் கேட்டையடைந் திருந்தனரென்பதும், அவரைச் சீர்ப்படுத்தப் பகவத்பாத பாஷ்யக்காரர் எத்துணை அரும்பாடுபட்டனர் என்பதும் ஆராய்ச்சி சக்தியுள்ளவர்க்கு எளிதில் விளங்கக் கூடிய விஷயமாதலால் அது விஷயமாக நாம் அதிகம் விளக்க வேண்டுவதில்லை என்றெண்ணுகிறோம். ஆனால் மஹாபாரத காலத்துக்குப் பின்னர் சங்கரர் காலம் வரையுள்ள இடைக்காலங்களில் வேத வைதிக மார்க்கங்களுக்கும், வர்ணாசிரமதர்மங்களுக்கும் நேர்ந்த சீர்கேட்டை பகவத்பாதர் தன்னாளில் எத்துணையோ பாடுபட்டு ஒருவாறு சரிப்படுத்தினராயினும் சங்கரர் காலத்துக்குப் பிறகு இன்று முதல் சுமார் 200 வருஷங் களுக்கு முன்னர் வரை யேற்பட்டிருக்கும் வேதவைதிக மார்க்கச் சீர்கேட்டை ஏதோ ஒருவாரு த்ரைவர்ணிகர் ஸமாளித்துக்கொண்டனர். ஆயினும் சுமார் 200 வருஷங்களாக ஏற்பட்டிருக்கும் வேதவைதிக மார்க்கச் சீர் கேட்டையும், இனியேற்படவிருக்கும் சீர் கேட்டையும் சரிப்படுத்துவதென்பது பகவானே நேரில் வந்தால் அல்லாது நடவாதென நாம் திட்டமாய் எண்ணுகிறோம்.

 

இவ்விதம் பஹாபாரத காலத்துக்கு முன்னரிருந்த த்ரைவர்ணிகர்கள் வைதிக மந்திரங்களையும், அதன் அனுஷ்டான முறைகளையும் தங்களது குடும்பச் சொத்தாகக் காத்துவருவதையும், அதனால் அவர்கள் மேன்மை பெற்று விளங்குவதையும் கண்ட அக்காலத்திய ஜாதி சூத்திரர்கள் தாங்களும் வைதிக மந்திரங்களைக் கொண்டே அம்மேன்மையை அடைய எண்ணங் கொண்டவர்களாய் த்விஜாதிகளின் சொத்தான வைதிக மந்திரங்களையும் அதன் அனுஷ்டான முறைகளையும் எப்பாடுபட்டேனும் த்விஜரிடமிருந்து பெற்றுவிட வேண்டுமென வெண்ணி அவ்வழியிலிறங்கியதைக்கண்ட முற்கூறிய த்ரைவர்ணிகர்கள் “ஜாதி சூத்திரன் வேதத்தைக் காதால் கேட்கவோ, நாவா லுச்சரிக்கவோ, மனத்தால் அதன் பொருளைத்தியானிக்கவோ கூடாது” என விதியிருப்பதை அவர்க்கு எடுத்துக்கூறினர். அதுகேட்ட அந்த ஜாதி சூத்திரர் ஆண்டவனது படைப்பில் அகப்பட்ட தாங்களும் நல்லகதியை அடையவேண்டுவது அவசியமாதலால் எதைக்கொண்டு தாங்கள் கரையேறுவது எனக்கேட்குங்கால் அந்த ஜாதி சூத்திரர்களைக் கரையேற்றுவிப்பாந்நோக்கி வேதோப ப்ரம்ஹணங்களான இதிஹாஸம், புராணம் இவைகளை அவர்க்குக் கற்பித்து அதன் மூலம் பல மந்திரங்களையும், ஞான மார்க்கத்தையும், கர்மமார்க்கத்தையும் பக்திமார்க்கத்தையும் தங்களுக்கிருப்பதற் கொப்பாகவே உபதேசித்து அவர்களுக்கும் முக்திவருவதற்குப் போதிய
ஸாதனங்களையும் கற்பித்துக் கொடுத்தனர். இவ்விதம் தங்களுக்குப் பல நல்வழிகளிருப்பினும் தாங்களும் வேதங்களை ஏன் கற்கக்கூடாதென அவர்கள் வற்புறுத்திக்கேட்கத் தொடங்கி எவ்வழியிலேனும் அதைக் கற்றுத்தான் தீருவோம் எனப் பிடிவாதம் செய்யத் தொடங்கினர். இவ்விதம் தப்புவழி செல்லுமிவர்க்கு என்ன சொல்லியும் அது பயன்படாது போகவே வேதங்களாகிற தங்களுடைய சொந்தச் சொத்தைப் பிறரிடமிருந்து ரக்ஷிக்க வேண்டிப் பின்வரும் விதியை யேற்படுத்தினர்.

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி - ஒரு பார்வை - தமிழ்ஹிந்து

அதாவது: ஸ்திரீ, சூத்திரன், த்விஜபந்துக்கள் = த்விஜனாய் பிறந்தும் த்விஜனுக்குரிய நியமமில்லாது பெயர்க்கு மட்டும் த்விஜனாகவுள்ளவர் ஆகிய இம்மூவருடைய காதிலும் வேதம் படக் கூடாது அதாவது: அவர் கேட்கும்படி எவரும் அத்யயனம் செய்யக்கூடாது என்றும். அவர்க்கு வேண்டியே ஐந்தாவது வேதமான பாரதமும், 18 புராணங்களும் ஏற்பட்டன பற்றி அதையவர்கள் கற்கவேண்டுமென்றும் வறையறுத்தனர். இவ்வித வறையறையினால் ஜாதி சூத்திரரோடு மட்டும் நில்லாது ஸ்திரீகள் பிரம்ஹசரியாதி நியமமிழந்த தவிஜர் ஆகியோர்க்கும் வேதாதிகாரம் இல்லாமற் போய்விட்டது.

ஆனால் வேதத்தில் அதிகாரம் வைத்துக்கொண்டிருக்கும் த்விஜர்கள் ப்ரம்ஹசர்ய விரதானுஷ்டான விஷயத்தில் படுங்கஷ்டத்தையும் அத்தகைய கஷ்டத்துடன் வேதத்தைக்கற்று அதன் மூலம் அவர்கள் தம்போன்றவர்க்கும் திருஷ்டாதிருஷ்ட வழிகளிலுபகரிப்பதையும் கண்ட ஜாதி சூத்திரர்கள் வேதத்தைக் கற்பதில் தமக்குள்ள ஆவலை அடியோடு விலக்கிக்கொள்ள ஆரம்பித்தனர்.

இப்படிப் பெரும்பாலோர் இருந்தபோதிலும் அவர்களுள் ஒரு சில ஜாதி சூத்திரர் தாம் வேதத்தை எவ்வழியிலாவது கற்றுத்தான் தீர வேண்டும் எனவெண்ணி நியம பூர்வகமாய் த்விஜர் அத்யயனஞ் செய்யுங்கால் வேறிடத்தில் மறைந்து நின்று அவற்றைக் காதால் கேட்கவும் கேட்டதை மனத்தில் தரிக்கவேண்டி ஆவிருத்தி (அடிக்கடி சொல்லல்) செய்யவும், அதன் பொருளை மனத்தில் தியானித்து அதைத் தாங்களும் செய்ய வெண்ணவும் ஆரம்பிப்பதைக்கண்ட ஜாதித்விஜர்கள் தங்களுடைய சொந்தச் சொத்தைக் காக்கவெண்ணி ஜாதி சூத்திரர்க்குப் பயத்தை யுண்டாக்கவேண்டிப் பின்வருமாறு கடுமையான விதியொன்றை ஏற்படுத்தலாயினர். அதாவது:நியம பூர்வகமாக வேதத்தையொருவன் அத்யயனம் செய்யுங்கால் ஜாதி சூத்திரன் மறைந்திருந்து கேட்பானாயின் அவன் காதில் ஈயம், அரக்கு இவற்றைக்காய்ச்சி ஊற்றவேண்டுமெனவும், நாவால் அதையுச்சரித்தால் நாவைச்சேதிக்க வேண்டுமெனவும், அதன் பொருளை மனத்தால் தரித்தால் சரீரத்தைப்பிளந்து விட வேண்டுமெனவுமாம். ஆனால் இவ்விதம் ஒரு விதிமட்டும் செய்தனரே அன்றி அவ்விதம் எவரையேனும், எந்த ஸமயத்திலேனும் செய்தாரென ஒரு புராணாதிகளிலும் கூறப்படவில்லை. ஆதலால் இது அவர்களைத்தடுக்கவேண்டிச் செய்த கடுமையானதொரு விதிமட்டுமேயாகும் என்பதில் யாதுமையமில்லை. மேலும், இவ்விதம் ஜாதி சூத்திரர் விஷயத்தில் விதியேற்படுத்தியது மட்டும் போதாதெனவெண்ணித் தமது த்விஜாதியாருள் நியமபூர்வகமாய்
வேதாத்யயனம் செய்பவர் எவரும் ஜாதிசூத்திரனுடைய ஸமீபத்தில் வேதத்தை அத்யயனம் செய்தல் தகாதென்பதாய் இவர்கட்கும் ஒரு விதியை யேற்படுத்தினர். இம் மட்டோடும் நின்றுவிடாமல் எப்பாடுபட்டேனும் ஜாதிசூத்திரனதருகில் இவர் வேதாத்தியயனஞ் செய்வதைத் தடுக்க வெண்ணம் கொண்ட பெரியார் ஜாதி த்விஜனை எச்சரிக்கை செய்வதற்கு வேண்டி “ஜாதி சூத்திரன் நடமாடும் ஸ்மசானத்துக்(சுடுகாட்டிற்கு) கொப்பானவன் ஆதலால் அவனருகில் வேதத்தை அத்யயனஞ் செய்யாதீர்” என்றார்.

*******

இந்நூலின் முகவுரை மட்டும் 30 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் சிலவற்றை மட்டும் மேலே தந்துள்ளேன்.நூலின் முகவுரையில் கேள்வி மற்றும் பதில்களையும் ஆசிரியர் அளித்துள்ளார், அவற்றை அடுத்த பகுதியில் காண்போம்.

தினகரன் செல்லையா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here