கோயில்கள் யாருக்கு? பகுதி – 1

தொடர்ச்சி…

கௌதம ஸ்மிருதியுங், “பதிதன், சண்டாளன், பிரஸவ ஸ்திரீ, தூரஸ்திரீ, பிணம் இவர்களைத் தொட்டவன், தொட்டவனைத்தொட்டவன், இவர்களைத் தொட்டால் வஸ்திரத்துடன் ஜலத்தில் ஸ்நானஞ் செய்தாற் சுத்தனாவான்” என்கிறது. இன்னும் பல ஸ்மிருதின் கர்த்தாக்கள் சிவாகமத்திற்கு விரோதமின்றியே கூறுகின்றனர்.

ஆனாற் கலியுகத்திற் பின்பற்ற வேண்டிய பராசர ஸ்மிருதியில் தீண்டாமையைக் குறித்து யாதேனும் விதிக்கப்பட்டுளதாவெனச் சிலர் உசாவக்கூடும். அதனையுஞ் சற்றாராய்வாம்:

சக்கிலி, சண்டாளன் இவர்களோடு பிராமணன் பேசினாற் பிறகு பிராமணர்களோடு பேசியுங் காயத்ரியை ஒருதரம் ஜெபித்தும் சுத்தனாகிறான்.

சண்டாளனைப் பார்த்தவுடனே சூரியனைப் பார்க்க வேண்டும். அவனைத் தொட்டால் துணியுடன் ஸ்நானஞ் செய்ய வேண்டும்.

சண்டாளனுடன் தூங்கினவனுக்கு மூன்று நாளுபவரஸத்தை விதிக்க வேண்டும். சண்டாளனுடன் வழி நடந்தவன் காயத்ரியை ஸ்மரித்தாற் சுத்தனாகிறான்.

சண்டாளனால் வெட்டப்பட்ட நடவாபிகளில் தெரியாமற் பிராமணன் தண்ணீர் குடித்தால் ஒருநாள் ஒரே வேளை போஜனத்தினாற் சுத்தனாகிறான்.

சண்டாளன் பாத்திரம் பட்ட கிணற்று ஜலத்தைக் குடித்த பிராமணன் மூன்று நாள் கோமூத்திரத்தையும் யவ அரிசி மாவையும் புசித்துச் சுத்தனாகிறான்.

சண்டாளனுடைய பாண்டத்திலிருக்கும் ஜலத்தைக் குடித்த பிராமணன் பதிதனாவான். அந்தப் பிராமணன் பிரஜாபத்ய கிருச் ரத்தைச் செய்யக் கடவன். இந்தப் பிராயச்சித்தமானது அப்படிக் குடித்த ஜலத்தை வாந்தி பண்ணினால்தான். அந்த ஜலம் சரீரத்திற் செரித்து விட்டால் ஸாந்தபனமென்கிற விரதத்தைச் செய்யவேண்டும்.

பிராமணன் குடித்தாற் சாந்தபனமும் க்ஷத்திரியன் பிரஜாபத்யமும் வைத்யன் அதிற் பாதியும் சூத்திரன் அதிற் காற் பாகமும் பிராயச் சித்தஞ் செய்ய வேண்டும்.

சண்டாளனுடைய பாத்திரத்திலிருக்கும் ஜலம், தயிர், பால், இவைகளைச் சாப்பிட்ட மூன்று வர்ணத்தாரும் பிரம்ம கூர்ச்ச பானத்துடன் உபவாஸமிருக்க வேண்டும். சூத்திரனுக்கு உபவாஸத்துடன் சக்திக்கீடாகத் தானம் செய்வது பிராயச்சித்தம்.

அறியாமற் சண்டாளன் அன்னத்தைப் புசித்த பிராமணன் பத்து நாள் யவமென்கிற அரிசியைக் கோ மூத்திரத்துடன் சாப்பிட்டுச் சுத்தனாகிறான்.

முற்கூறியவாறு அன்னத்தைப் புசித்தவன் கோ மூத்திரத்துடன் யவ அரிசியைத் தினம் ஒன்றுக்கு ஒரு கவளமாக நியமத்துடன் புசித்து விரதமிருக்கவேண்டும்.

ஒரு மாதமாவது அரை மாதமாவது சண்டாளரோடு சக வாஸம் நேர்ந்தால் யவ அரிசியினாலும் கோ மூத்திரத்தினாலும் அரை மாதம் போஜனஞ் செய்து சுத்தனாகிறான். ஆகவே இந்தச் சுலோகங்களைக் கண்ட உத்தமர் கழிபேரு வகை பூப்பர். மத்திமர் தாங்கள் இதுகாற்றுஞ் செய்துவிட்ட காரி யத்திற்குத் துக்கித்துப் பிராயச்சித்தஞ் செய்து கொள்வர். ஆகமர் இதெல்லாம் நம்மால் முடியாதென்று இனிச் செய்யாமலிருப்பர்.

ஆகவே பூட்ஸ் போட்டுக்கொண்டும் சோபாவின் மேற் சாய்ந்துகொண்டும், போதாக் குறைக்குக்கூட நாயை வைத்துக் கொண்டுந் தீண்டாதாரோடு சமபந்தி போஜனஞ் செய்துகொண்டுங் கலப்பு விவாகஞ் செய்துகொண்டுங் காலத்தைக் கழிப்போர் கதி அதோ கதியென்பது யாமெடுத்துக் கூறவும் வேண்டுமா?

“பிராமணன் சண்டாள ஸ்திரீயையாவது சக்கிலி ஸ்திரீயையாவது புணர்ந்தாற் பிராமணர்களுடைய அனுமதிபெற்று மூன்று நாள் உபவாஸம் (உண்ணாவிரதம்) இருந்து சிகை (குடுமி)யுடன் மொட்டை படித்துக்கொண்டு இரண்டு பிரஜாபத்ய கிருச்ரத்தைச் செய்து இரண்டு பசுக்களைத் தக்ஷிணையாகக் கொடுத்துச் சுத்தி யடைகிறானென்று பராசார் சொன்னார்”. இதைக் கேட்ட பிறகுமா கலப்பு விவாகத்திற்குக் கனவு காண்பது! பசுவைத் தானஞ் செய்ய வேண்டுமென்றால் அதைவிட்டுப் பசுமாம்சம் உண்பாரோடா விவாகம்! பேஷ்,நன்றாயிருக்கிறது ஞாயம்! இது பெருங் கலிக்கூத்தே !

தீண்டாதார்களை வளர்ப்பவர்களும் அவர்களோடு உண்பவர்களும் அவர்கள் வீட்டிற் சாப்பிடுபவர்களும் கலப்பு விவாகஞ் செய்பவர்களும் எப்படி இந்துக்களாவர்! எப்படிச் சநாதன தர்மிகளாவர் ! இவர்களை யெல்லாம் இந்துக்களல்லவென்று வொதுக்கவே சட்டம் பிறப்பித்தலாவசியகமாயிருக்கிறது இந்து மதத்தின் புநிதத்தை இவர்களன்றோ கெடுக்கின்றனர். இவர்களன்றோ கலிகாலக் கொடியோர் ! அந்நிய மகத்தினரை நோவானேன்? அத்தகைய போலி ஹிந்துக்களே ஆலயப் பிரவேசஞ் செய்யக் கூடாதென்று சட்டம்பிறப்பித்தல் அரசாங்கத்தார் கடனேயாம். ஆகவே இப்பேர்ப்பட்டவர்களுங் கன்ம சண்டாளர்களாய் விடுகிறபடியால் ஜாதிச் சண்டாளர் மாத்திரமன்று. இவர்களும் இனி ஈஸ்வரன் கோயில் பொது என்றுசொல்லவு மிடமில்லை, நுழையவுமிடமில்லையென் றுணர்வாராக. குரானுக்குக் கட்டுப் படாதவன் மகம்மதியனாவனோ! பிராமணர்கள் மாத்திரந் தானே சண்டாளரோடு கலப்பு விவாகஞ் செய்யக் கூடாதெனச் சுலோகங் காட்டப்பட்டது.

“நமக்கென்ன நாம் தாராளமாய்ச் செய்து கொண்டு கோயிலுள் நுழையலாம் ” எனப் பிறர் வாய் திறப்பராபின் கீழ்வருஞ் சுலோகங்கள் அன்னாருக்கு வாய்ப்பூட்டிடுகின்றன.

க்ஷத்திரியனாவது வைச்யனாவது சண்டாள ஸ்திரீயைப் புணர்ந்தால் இரண்டு பிரஜாபத்ய கிருச்சத்தைச் செய்து இரிஷபங் களோடு கூடின இரண்டு பசுக்களைத் தானம் செய்ய வேண்டும்.

சூத்திரன் சக்கிலி ஸ்திரீபையாவது சண்டாள ஸ்திரீயை யாவது புணர்ந்தால் பிரஜாபத்ய கிருச்சத்தைச் செய்து இரிஷபங்களோடு கூடின நான்கு கோதானஞ் செய்ய வேண்டும்.” ஆகவே வர வர அபராதம் முட்டையிட்டுக் குஞ்சு பொரித் ததிகரித்தற் காண்க. நாலு காசு பாலுக்கே கஷ்டப்படுஞ் சூத்திரன் நாலு பசுக்கள் எருதுகளுக் கெங்கிருந்துபோவன்! இரண்டு பிரஜாபத்ய கிருச்ரத்தை எவ்வாறு செய்து முடிப்பன்! ஒருதரம் புணர்ந் தாலே இவ்வளவு வெகுமானமென்றாற் கலப்பு விவாகமா? மாடு தின்னும் புலையரோடு மணத்தலா! இன்னும் பராசர ஸ்மிருதி
முதலியவற்றால் நான்காஞ் சாதியாகிய சூத்திரருக் கன்னியமாகச் சண்டாள ஜாதி பெறப்பட்டவாறுங் கண்டமைக.
ஆலயப் பிரவேசங் கூடாதென்பது நந்தனார் சரித்திரத்தாலும் நன்கு வலியுறுத்தப்படும் நிற்க,தாயோடேனும் தங்கையோடேனும் மகளோடேனும் எவன் மோகித்துப் புணர்கிறானோ அவனுக்குப் பெரும் பிராயச் சித்தம் விதித்திருத்தலின் ஆணவத் தடிப்பையும் இந்திரியங்களின் சேஷ்டையு மடக்கவே தீண்டாமையேற்பட்டது பேருபகார மாதற் காண்க.

இறுதியாக நம் பாரசர ஸ்மிருதியானது,

‘பதிதர்களுக்கு ஒரு நுகத்தடியும் மாதவிடாயானவட்கு இரண்டும் பிரசவித்தவட்கு மூன்றுஞ் சண்டாளனுக்கு நான்கு நுகத்தடியும் விலக வேண்டும்” என்றும்,

” முற்கூறிய அளவைவிடக் கிட்டே நெருங்கினால் உடுத்த துணியுடன் ஸ்நானஞ் செய்தல் வேண்டும். மேற்கூறியவர்களைத்
தெரியாமற் தொட்டால் அப்படி ஸ்நானஞ் செய்வதோடு சூரியனைத் தரிசிக்க வேண்டும்” என்றுங் கட்டளையிட்டு விச்சிராந்தி யடைகின்றது.

சண்டாளர் என்போர் யார் என்பது;

ஸ்மிருதிகளிற் சூத்திரனுக்கும் பிராமண ஸ்திரீக்கும் பிறந்த சண்டாளன் என்று கூறப்பட்டிருப்பது பலரும் அறிந்த வன் தொன்றே. அவ்வாறே அமரகோஷமும்,
சூத்திரனாற் பிராமண ஸ்திரீக் குப் பிறந்தவன் சண்டாளன் ஆவான் என்று கோஷிக்கின்றது.

வாசஸ்பத்யமும், சூத்திர ஆணும் ப்ராஹ்மணப் பெண்ணுங் கலந்துண்டாக்கிய கலப்புச் சாதி என்று கூறுகிறது.

இந்தியாவைவிட்டு மேற்கே போய் ஆசாரங் கெட்டு மாட்டிறைச்சி முதலியவற்றை யுண்டு பலவகையாகக் கலந்துபோனவர்களெல்லாம் எப்படி மிலேச்சர்களென்றும் ஹூணர்களென்று மழைக்கப்படுகின்றனரோ அவ்வாறே ஈண்டுந் தீண்டாதார்கள் அனாதி காலத்திருந்து பெருகிச் சண்டாளர் என்றழைக்கப்படுகின்றனர். பிற் காலத்திலுண்டாகியவரே பெருகிவிட்டன ரென்றால் முற்காலத்துண்டாகிய சண்டாளர் ஏராளமா யிருக்கக் கேட்பானேன்.

அனாதிகாலந்தொட்டு அந்தச் சண்டாளர் எனப்படுவோர் எல்லோரும் இயல்பாயுள்ள காமப் பெருக்காற் சூத்திர ஆண்களுக்கும் பார்ப்பினிகட்கும் உண்டாகி விட்ட பிரதிலோமக் கலப்புச் சாதி யாகி அவர்களுக்குள்ளேயே பல பாஹிய ஜாதிகளாகிப் பிரிந்து, கொள்வன கொடுப்பனவெல்லாம் அவர்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு சேரியிலோர் புறம் ஒதுங்கி வாழ்ந்து உயர்ஜாதி இந்துக்களைத் தீண்டாதிருந்துவால் காண்க.

மாங்காயிலும் பல தினுசுகளும் உருசிபேதங்களுங் குண பேதங்களும் அவ்வாறே நாய்களிலும் பலவகை பேதங்களும் ஏற்பட்டு உயர்ஜாதி மாம்பழம் உயர்ஜாதி நாய் முதலியன ஏற்பட்டிருப் பதுபோல மனிதர்களிலும் உயர்வு தாழ்வு பூர்வீக கன்ம பேதத்தா லுண்டாதல் நிச்சயமாதலின் பேதங் கிடையாதென்பது பேதமையே யென்க. உயர்வு தாழ்வின்றி உலகத்தில் ஓர் காரியமும் நடைபெறாமை அனுபவத்தாலும் நன்கு காண்க. எல்லாப் பிராணிகளுங் கன்மத்திற் டோகவே ஈசனால் உயர்வு தாழ்வாகப் படைக்கப் பட்டமையும் பிரத்தியட்சமே யென்க. சிருஷ்டியைப் பார்த்தாலே அளந்த விறபேதமாகக் காண்பது பிரத்தியட்சம். ஒருவர் முகம் போல் மற்றொருவர் முகமில்லை. நால்வகை யோனி எழுவகைப் பிறப்பு (அச) லட்ச யோனி பேதங்களாதலையும் ஆராய்ந்தறிக, ஆகவே பேதமில்லையென்பது யாண்டையதென்க.

வேதத்திற் சண்டாளர் என்னும் பதம் பிரயோகிக்கப்பட்டமை;

சாந்தோக்யம். 5-10 :
எவர்கள் இங்குக் கெட்ட நடத்தை யுடையவர்களோ அவர்கள் அடுத்த ஜென்மத்தில் இழிந்த பிறப்பாகிய நாயகவோ, பன்றியாகவோ, சண்டாளனாகவோ பிறக் கிறார்கள். ”

பிருஹதாரண்யகம், 4-3-22: இந்த (ஸுஷுப்தி) நிலைபிலிருப்பவன் திருடனாயிருந்தாலும் திருடனல்ல. சிசு வதை செய்கிறவனாயிருந்தாலுஞ் சிசு வதை செய்கிறவனல்ல. சண்டாளனாயிருந்தாலும் சண்டாளனல்ல.

ஸ்ரீருத்திரம். 4ம் அநுவாகம்:- பக்ஷிகளின் கூட்டங்களை அடிப்பவர்கள் உருவமாயும், நாயையடிக்கும் நிஷாதர்கள் உருவமாயும் (இருக்கிற) உங்களுக்கு அடிக்கடி நமஸ்காரம்.

நாய்கள் ரூபமாய் இருப் பவராயும் நாயகளுக்கு யஜமானர்கள் உருவமாய் இருப்பவராயும் (இருக்கிற) உங்களுக்கு அடிக்கடி நமஸ்காரம்.” நிஷாதபதமும், ஸ்வபதி என்கிற பதமும் சண்டாளன் என்பதற்குப் பரியாய நாமமாதலைக் கீழ்வரும் அமர நிகண்டாற் காண்க.

“ சண்டாள, ப்லவ, மாதங்க, தீவாகீர்த்தி, ஐநங்கம:, நிஷாத, ச்வபச, அந்தாவாஹீ, சாண் டாள, புல்கஸ.

தமிழிலுஞ் சண்டாளன் என்னும் பதம் புலையன் முதலியோரைக் குறிக்குமெனல்;

“குணுங்கர் வங்கர் கவுண்டர் கநகதரிழிஞர் கொலைஞர் புலைஞ சென்றாங் கிசையும் பெயர் சண்டாளர்க்கெய்தும்,” திவாகரம்.

“குணுங்கர் புலைஞர்கீழோ ரிழிஞர் அணங்கு சண்டாளர்க்கபி தா னம்மே,” பிங்கல நிகண்டு.

“கொலைஞரே களைஞர் வங்கர் குணுங்கர் மாதங்கரோடு புலைஞரே யிழிஞ் ரேழ்பேர் பொருந்து சண்டாளர் நாமம். ” சூடாமணி நிகண்டு

குணுங்கள் தோற் கருவிமாக்கள் குயிலு வரிழிழர் முப்பேர் ” சூடாமணி,

புலைஞர் – ஈனர், சண்டாளர், பறையர், (அகராதி)

புலைச்சேரி – பறைச்சேரி, புலைப்பாடி. (அகராதி)

பறையன் – பறை படிப்போன், பறைசெய்வோன். அதாவது மேளமடிப்போன், மேளஞ் செய்வோன். இதை விளக்கும் · பொருட்டே, வைஜயந்தி நிகண்டுங் கீழ்வருமாறு கூறுகின்றது:

“ சண்டாளன் இடுப்பிற் கச்சை கட்டிக்கொண்டு அல்லது கழுத்திற் தோலைக் கட்டிக்கொண்டு தப்பட்டையடிப்பவன். அவன் மலத்தை யெடுத்துச் சுத்தி செய்வான்.

சண்டாளன் அந்தாவசாயி யெனும் இவர்கள் வனத்தையுஞ் சுடுகாட்டையுங் காப்பார்கள். இவ்வாறு சண்டாளருக்குள் பல பிரிவுகளைக் காட்டல் காண்க.

தேவர்களுள்ளும் நான்கு ஜாதிகளுண்டென்பது;

நீவிர் (சிவபெருமான்)தேவர்களுள்ளே
பிராமணர் என்று சாமவேதிய சதபதப்பிராம்மணத்தினும்,

தேவர்களுக்குள்ளே சிவபெருமான் பிராமணர். விஷ்ணு க்ஷத்திரியர். பிரம்மா வைசியர். இந்திரன் சூத்திரன் என்று பராசர புராணம், தக்ஷாகாண்டம் புராணங்களிலும்,

பிராமணர்களுக்குச் சிவபிரானும் க்ஷத்திரியர்களுக்கு விஷ்ணுவும் வைசியர்களுக்குப் பிரமாவும் சூத்திரர்களுக்கு இந்திரனுந் தெய்வம் என்று ஸ்மிருதியினும் ஸ்காந்தத்தினுங் கூறப்படுகின்ற மையானும், ‘வேதியா, ‘அந்தணா’, ‘மறையோனே’, என்று திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் சுந்தரரும் அளவுகடந்து அடிக்கடி தமிழ் வேதமாகிய தேவாரத்து வாய்நிரம்ப அருணாத வொலியால் ஸ்துதிக்கின்றமையானும் அவ்வாறே ஸ்ரீமந் மணிவாசகப் பிரபுவும் திருவாசகத்தில் “காப்பாய் முதல்வா முன்னே யென்னையாண்ட பார்ப்பானே யெம்பரமாவென்று பாடிப்பாடிப் பணிந்து பாதப்பூப் போதணைவ தென்றுகொல்லோ” என்றுள்ளங் குளிர்ந்தோதுகின்றனும் தேவருள்ளும் நான்கு ஜாதியுண் டெனப் பெறப்பட்டுச் சிவபெருமான் பிராமணராகின்றமையால் அச்சிவபெருமா னொருவரையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற எழுவகைப்பட்ட சைவர்களும் மற்ற தேவதைகளைத் தொழும்படியான சாமானிய பிராமணர் முதலியோர்களைப் பார்க்கினும் எத்தனையோ மடங்குயர்ந்தவர்களாகின்றனர் என்பதும் நன்கு சிந்தித்தது.

இனித் தொல்காப்பியத்தும், “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகைமாபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் என்று பொருளதிகாரம் புறத்திணையியல் (20)ஞ் சூத்திரத்தானும் நால்வகைச் சாதியுந் தொழிலும் விரித்தோதப் பட்டிருத்தல் காண்க. இனி நாயனாரும், ” மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக்கெடும்”, “ அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன்கோல்”, “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறைப்பர் காவலன் காவானெனின்”, என்று கூறுதலுங் காண்க.

ஆசை வெட்கமறி யாதென்னும் பழமொழிக்கிணங்க ஆலயப்பிரவேசஞ் செய்தலாகிய அடாத காரியஞ் செய்தாற் படாதபாடு படுவர் என்பதைக் கடைப் பிடிக்க. தண்டிக்கச் சிவபெருமான் வேண்டியதில்லை, பசுக்களைக் கோலாலடித்தலையே பொறுக்காத சண்டேசுர நாயனார் தந்தையை வெட்டிச் சாய்த்ததுபோற் கோஹத்தி செய்வோர் கோயிலுக்குள் நுழைந்தால் பெருந்தண்ட மியற்றுவாரென்பதுஞ் சத்தியம். அவர் கையில் மழுவாயுதம் வைத்துக்கொண்டு பாவிகளைக் கோபிப்பதுங் கவனிக்கத்தக்கது. நரகத்திற்கஞ்சுக. குளிக்கப்போய்ச் சேறு பூசிக் கொள்ளற்க, சிவாலய விதிக்குக் கட்டுப்படாதார் சிவாலயப்பிரவேசஞ் செய்வதாற் போந்த பயன் யாதோ? பயன் நரகப் பிராப்தியே. இவர்கள் வெகுகாலமாகக் கடவுளுக்குப் பயந்து ஆலயப்பிரவேசஞ் செய்யக் கனவிலும் நினையாமல் வெளியிலிருந்தே வணங்கி வந்தனர். ஏனெனின் கோபுரம் ஸ்தூல லிங்க மாதலின் அதனைத் துரத்திருந்தே கைகூப்பித் தொழுதலே அவர்களுக்கேற்பட்ட விதியாதலினென்க.

மறந்தும் தீண்டத்தகாதவர்கள்,பெண்கள்,சூத்திரர்கள் கோயில்களில் நுழைதல் கூடாது, அப்படி நுழைந்தால் அதற்கான சாந்தி சடங்குள் என்னென்ன என்பதை பல்வேறு பெயர்களில் இன்றும் நம் கண் முன்னே கோயில்களில் நிகழ்த்தப்படுகிறது. இந்தச் சடங்குள் மேற்கூறிய பல பெயர்களில் வழங்கப்பட்டு வருவதால் இதன் உண்மையான தாத்பரியம் யாருக்கும் பிடிபடுவதில்லை. இந்தச் சடங்குகள் நிகழ்வதற்கான காரண காரியங்களை மேலுள்ள நூல் ஒன்றின் மூலம் மிகத் தெளிவாக உணரலாம்.

இதற்கு மேலும் அடம்பிடித்து நாங்களும் கோயில்களுக்குள் போவோம், அது எங்கள் உரிமை, நாங்கள் கட்டியது என்று உள்ளே செல்கிறவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளட்டும், ஒவ்வொரு முறை நீங்கள் உள்ளே வந்து செல்லும் போதெல்லாம் தீட்டு கழிப்பதற்காக சாணத்தையும் கோமியத்தையும் கரைத்து நம் முன்னாடே பூசை புணஸ்காரம் எனும் பெயரில் கழுவி கழுவி ஊற்றுவார்கள். இந்த அவமானம் அக்கிரமம் பரவாயில்லை என்கிறவர்கள் வழக்கம் போல தாராளமாக கோயிலுக்குள் செல்லட்டும்..

இந்நூலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ளவற்றை மட்டுமே தொகுத்து எடுத்துரைத்துள்ளேன். இந்த நூலை வாசித்தும், தன்னை ஹிந்து என அடையாளப்படுத்துவோர் உண்டென்றால் அவர்கள் தங்களது மனம் சரியாக செயல்படுகிறதா என்பதை பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

  • முற்றும்.

தினகரன் செல்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here