அன்னபூரணி அரசு அம்மனின் (ஆதி பராசக்தி) வேட்டை :-


அன்னைபூரணி அன்றொரு நாள் மற்றொரு பெண்ணின் கணவரும், இரண்டு குழந்தைகளின் தகப்பனுமான அரசு என்பவரை வேட்டையாடிக் கவர்ந்திருப்பார். அதற்கு முதலே அன்னபூரணி திருமணமாகித் தனது முதல் கணவரினைப் பிரிந்திருந்தார். இது தொடர்பான ஒரு வழக்காடல் போன்ற ஒரு நிகழ்வினைச் சொல்வதெல்லாம் உண்மை என்ற பெயரில் ஒரு தொலைக் காட்சி நடத்தியிருந்தது. அந்த நிகழ்வில் அன்னபூரணியின் முதலாவது கணவர் வந்து , இரண்டாவது கணவரை அடிப்பதனைக் கீழுள்ள காணொளியில் காண்க.
இதனைப் பார்த்த பிறகு அவரினைச் சாமியாக நம்ப பலரும் தயங்குவார்கள். சரி, இதுவே ஒரு ஆண் சாமியாக இருந்து, இரண்டாவது பெண்ணினை வேட்டையாடிக் கொண்டு வரும் போது முதல் மனைவியுடன் சண்டையிட்டாலும் இதே மனநிலையில்தானே இருப்பீர்கள்.

இப்போது அப்படியே சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் நடைபெறும் வேட்டைத் திருவிழாவுக்குப் போவோம். அங்கு தெய்வயானை எனும் முதல் மனைவியான தெய்வயானையினை (தெய்வானை ) வீட்டில் விட்டு, வேட்டையாடப் போன சுப்பிரமணிய சுவாமி, வள்ளி எனும் பெண்ணையும் கவர்ந்து வருவார். அப்போது அதனைக் கண்ட தெய்வயானை கதவினைத் திறக்க மறுப்பார். பின்னர் ஒரு வாய்ச் சண்டை நடைபெறும். அதனை ஒரு சடங்காக நாடகம் போலப் பாடல்களுடன் வேட்டைத் திருவிழா இரவு அன்று கோயில்களில் நடாத்திக் காட்டுவார்கள். சுப்பிரமணியன் திருமணம் செய்ததால் மன வருத்தம் அடைந்த தெய்வானை அவரிடம் கோபித்துக் கொண்டு தனியாக பல்லக்கில் எழுந்தருளி கோவில் கதவை அடைத்து கொள்ளும் நிகழ்ச்சியும், பின்னர் சுப்பிரமணியனின் தூதுவர்கள் ஊடல் பாடல்களை 3 முறை தெய்வானையிடம் பாடி அவரை அமைதிப்படுத்தி, முருகனிடம் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். சடங்கில் இப் பாடல்களை ஓதுவார்கள் பாடுவார்கள்
இதனைப் பார்த்த பின்பும் சுப்பிரமணிய சுவாமியினை எவ்வாறு ஏற்றுக் கொள்வீர்கள்?????

குறிப்பு – பழந் தமிழ்த் தொன்மமான முருகனுக்கு பழந் தமிழ் இலக்கியங்களில் வள்ளி மட்டுமே இணையராகக் காட்டப்படும். திருமுருகாற்றுப்படையிலேயே தெய்வானை இல்லை. பிற் காலத்தில் பார்ப்பனியம் தமிழரின் குறிஞ்சி நிலத் தலைவனான முருகனைத் தமது ஸுப்பிரமணியனுடன் கலந்த பின்பு, “முத்தை தரு பத்தி திரு நகை
அத்திக்கு இறை ” என்ற திருப்புகழ் வரியில் அத்தி என்பது தெய்வானையினைக் குறிப்பதாகச் சொல்வார்கள்.

முடிவு – ஸுப்பிரமணியன் செய்தது சரியென்றால் அன்னபூரணி செய்ததும் சரியே. அதனைத் திருவிளையாடல் என்றால் இதனையும் அவ்வாறே கொள்ளலாம். என்னைப் பொருத்தவரையில் இரண்டுமே, கடவுளுக்கு மட்டுமல்ல மனிதருக்கே அழகல்ல.

வி.இ.குகநாதன்.
முகநூல் பகிர்வு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here